உலகம் சுற்றும் நயன்

‘பில்லா’ படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இப்போது அஜீத், நமீதா பங்குபெறும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

‘யாரடி நீ மோகினி’ படப்பிடிப்பிற்காக நயன்தாரா பாங்காங் சென்றுள்ளார். விரைவில் படப்பிடிப்பு முடிந்துவிடுமாம்.

அதன்பின், அங்கிருந்தபடியே மலேசியா சென்று மே 18லிருந்து ‘பில்லா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

காதல், கத்தரிக்காய் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, படப்பிடிப்புகளுக்காக நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

[Source: Yahoo