கமல்ஹாசனுடன் சேர்ந்து செய்வதாக இருந்த ரோபோ படத்தை இப்போது அஜீத்துடன் இணைந்து அசத்த முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.
சுஜாதா கதை, வசனத்தில், கமல்ஹாசனை வைத்து ரோபோ என்ற படத்தை இயக்க ஷங்கர் பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ இப்படம் உருவாகவே இல்லை. இதனால் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தார் ஷங்கர்.
இப்போது ரோபோவை தூசு தட்டி எடுத்து வைத்துள்ளாராம். சிவாஜிக்கு அடுத்து ரோபோதானாம்.
வழக்கமாக ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே போதிய இடைவெளி [...]
